கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!
வடகொரியா என்ற Hwasong-18 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை திடமான உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது, போரின் போது ஏவுகணைகளை வேகமாக நிலைநிறுத்த அனுமதிக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகொரியாவின் குறித்த நடவடிக்கைக்கு தென்கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள இராணுவங்கள் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்துவதன் மூலமும், தென் கொரிய நட்பு நாடுகளுடன் அணு ஆயுதப் போர் திட்டமிடல் செய்வதன் மூலமும் பதட்டங்களை அதிகரிப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்கள் விரோதக் கொள்கைகளை கைவிடும் வரை நாடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பெருகிய முறையில் வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.