ரஷ்யாவிற்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பீரங்கி குண்டுகளை வழங்கும் வட கொரியா: தென் கொரியா குற்றச்சாட்டு
மாஸ்கோவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை ஆதரிப்பதற்காக, வட கொரியா, ஜூலை முதல் ரஷ்யாவிற்கு மில்லியன் கணக்கான வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லும் சுமார் 6,700 கொள்கலன்களை அனுப்பியுள்ளது என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் பாதுகாப்பு மந்திரி ஷின் வோன்-சிக் , கொள்கலன்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான 152 மிமீ பீரங்கி குண்டுகள் அல்லது 500,000 122 மிமீ ரவுண்டுகள் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கான வட கொரிய வெடிமருந்து தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள் மற்றும் மின்சாரம் இல்லாததால் அவற்றின் திறனில் சுமார் 30% இயங்குகின்றன, ஆனால் ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை உற்பத்தி செய்பவை ” முழு வீச்சில்” இயங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காய்ட்டியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)