பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்யும் வடகொரியா!
பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து வடகொரியாவில் முக்கிய அரசியல் மாநாடு நடைபெற்றுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 2023 முதல் பாதியில் நாட்டின் பொருளாதார பிரச்சாரங்களை மதிப்பாய்வு செய்துள்ளதுடன், “மாற்றப்பட்ட சர்வதேச சூழ்நிலையை சமாளிக்க” வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு உத்திகள் பற்றி விவாதித்துள்ளனர்.
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தென் கொரியாவிற்கு அனுப்பியதால் ஏற்பட்ட பதற்ற நிலைகளை அடுத்து இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
இவேளை இந்த மாநாட்டின் போது அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துக்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)