மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பியது!

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன.
நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம்இ மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)