கழுவத் தேவையில்லை, மாவுச்சத்து நீக்கம் – ஜப்பானில் விற்கப்படும் உலகின் விலை உயர்ந்த அரிசி!
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் கின்மிமாய் பிரீமியம் (Kinmemai Premium) எனப்படும் அரிசி, உலகிலேயே விலை உயர்ந்த அரிசி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த அரிசியின் 840 கிராம் விலை சுமார் 10,800 யென் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கின்மிமாய் பிரீமியம் அரிசி உலகிலேயே மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்கப்படுவதாக இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமைப்பதற்கு முன் மற்ற அரிசிகளைப் போல இதை கழுவ வேண்டியதில்லை என்பதே இதன் தனிச்சிறப்பு என தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அரிசி முழுவதுமாக நன்கு சுத்தம் செய்யப்பட்டு, அதிலுள்ள மாவுச்சத்து (ஸ்டார்ச் சத்து) நீக்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இதனால், சமையலின் போது சுத்தம் செய்யும் தேவை ஏற்படுவதில்லை.
எனவே, இந்த அரிசி நேரடியாக சமைக்கத் தயாராக உள்ளது. இதன் விலை மற்றும் தயாரிப்பு முறை காரணமாக இந்த அரிசி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.





