அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடே நம்பிக்கையில்லாப் பிரேரணை!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe இன்று (08) தெரிவித்தார்.

அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள், தமது அரசியல் இருப்புக்காகவே பிரேரணையை முன்வைக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடிப்படையாகக்கொண்டு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் நேற்று ஆரம்பமாகியது. இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும்.

இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு அறிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!