செய்தி தமிழ்நாடு

அமைச்சர் மெய்யநாதன் காரில் மோதிய புதுமண தம்பதிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் முன் சென்ற வாகனத்தை அதி வேகத்தில் முந்தி செல்ல முயலும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி இரு சக்கர வாகனத்தில்,பாண்டிச்சேரி அடுத்த கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுமண தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு கணவன் ஜான்சன் சம்பவ இடத்திலேயே பலி, மனைவி ரூத்பொன் செல்வி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்ற அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வர கார் சென்றதாகவும், கடலூரில் உள்ள தனது வீட்டிலிருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்தக் கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

(Visited 11 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி