கோல்டன் விசா” திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நியூசிலாந்து அரசாங்கம்!
நியூசிலாந்தின் அரசாங்கம், நாட்டில் முதலீடு செய்யும் அதிக செல்வந்த குடியேற்றவாசிகளை ஈர்ப்பதற்காக அதன் “கோல்டன் விசா” திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
வரலாற்று ரீதியாக பணக்காரர்களை நியூசிலாந்திற்கு ஈர்த்து ஆண்டுக்கு சராசரியாக NZ$1 பில்லியன் ($580 மில்லியன்) ஈட்டிய ஆக்டிவ் இன்வெஸ்டர் பிளஸ் விசா 2022ல் விதி மாற்றங்களுக்குப் பிறகு நலிவடைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 விண்ணப்பங்கள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை கண்டுள்ளதாக நிதி அமைச்சர் நிக்கோலா வில்லிஸ் தெரிவித்துள்ளார்.
விசா திட்டத்தில் மாற்றங்கள் ஆங்கில மொழி தேர்வை நீக்கிவிடலாமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விரைவில் இதற்கான பதிலை வழங்குவதாக வில்லிஸ் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)