மலர்ந்தது புத்தாண்டு – 2026 ஐ முதல் நாடாக வரவேற்றது கிரிபாட்டி
உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டை கொண்டாட ஆரம்பித்துள்ளது.
இலங்கை நேரப்படி, கிரிபாட்டியில் புத்தாண்டு சுமார் 8.5 மணிநேரம் முன்னதாகவே பிறந்துள்ளது.
அதாவது இலங்கையில் இன்று 31 மதியம் 3:30 க்கு கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.
அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபாட்டி 2026 ஆம் ஆண்டை வரவேற்று, உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடுகிறது.
கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சத்தாம் தீவில் வசிக்கும் 600 க்கும் மேற்பட்ட மக்கள் 2026 ஐ வரவேற்று கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்டும் இயங்குவதால் நாட்டுக்கு நாடு கொண்டாட்ட நேரம் வேறுபடுகிறது.
பசிபிக் நாடான கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட உள்ளன.





