இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய விசா முறை!
இலங்கையில் புதிய விசா முறை இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது இயங்கி வரும் ETA முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையான E விசா முறை இங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்கு சுற்றுலா விசாவின் கீழ் 08 வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.
வணிக விசாவின் கீழ் 04 வகையான விசாக்கள் வழங்கப்பட உள்ளன.
புதிய வீசா முறை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விசா விண்ணப்பத்தின் மூலம் விரைவாக விசா வழங்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.
இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் ஈர்ப்பை பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.