WhatsApp ஸ்டேட்டஸ் இனி Facebook, Instagramஇல் பகிர்வதற்கான புதிய அப்டேட்
மெசேஜ், வாய்ஸ் கால், புகைப்படம் மற்றும் வீடியோ ஷேரிங் மட்டுமல்லாமல், ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் அதிகளவில் பயன்படுத்துவது வாட்ஸ்அப் மட்டும் தான்.
இதனால் வாட்ஸ்அப் மூலம் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளிலும் பகிர புது அப்டேட் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.
இப்போது நிறுவனம் அதை WHATSAPP STATUS AUTOMATICALLY SHARE FEATURE மூலம் கொடுக்க இருப்பதை உறுதி செய்துள்ளது.
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில், மெட்டா அக்கவுண்ட் சென்டர் மூலம் ஒருங்கிணைப்பு செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மற்ற ஆப்களில் பகிர வழிவகை செய்ய இருக்கிறது.
இந்த புதிய வசதி விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது.
(Visited 57 times, 1 visits today)





