புதிய வரிகளால் அமெரிக்காவுக்கு தபால் சேவைகள் இரத்து

அமெரிக்காவில் வரிகள் அதிகரிக்கும் நிலையில் உலகம் முழுவதும் இயங்கும் 88 தபால் சேவை நிறுவனங்கள் அவற்றின் சேவைகளை இரத்துச் செய்துள்ளன.
அதன் காரணமாக அமெரிக்காவுக்குச் செல்லும் தபால் 80 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்ததாக உலகளாவிய தபால் சங்கம் தெரிவித்தது.
அமெரிக்காவுக்குத் தபால் சேவைகளை மீண்டும் வழங்க விரைவான தீர்வைக் கொண்டுவருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சென்ற மாதம் 29ஆம் தேதி அமெரிக்காவுக்குள் வரும் சிறிய பொட்டலங்களுக்கான வரி விலக்கை ரத்துச் செய்யப்போவதாக ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
அதனால் ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தபால் சேவைகள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொட்டலங்களைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தன.
(Visited 2 times, 2 visits today)