அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வரும் நோய் தொற்று – 06 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
H3N2 இன்ஃப்ளூயன்ஸா வகையைச் சேர்ந்த K என்ற புதிய துணைப்பிரிவு அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுமையான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வகை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் கடுமையாகப் பாதிப்பதாகவும், 105 டிகிரி செல்சியஸ் வரை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நியூயார்க், நியூ ஜெர்சி, ரோஸ் தீவு, லூசியானா மற்றும் கொலராடோ ஆகியவை மிக ஆபத்தில் உள்ள மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போதைய தடுப்பூசி துணைப்பிரிவு K க்கு குறிப்பாக அளவீடு செய்யப்படவில்லை என்றாலும், கட்டாயம் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.





