இலங்கை பஸ்களில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
இலங்கையில் தொலைதூர பஸ்களில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையின் பங்களிப்புடன் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அரச மற்றும் தனியார் பஸ்களில் 40 ஏஐ கமரா (AI camera) அமைப்புகள் பொறுத்தப்படவுள்ளன. இந்த கமரா சாரதியின் நடத்தையைக் கண்காணித்து, சாரதியை எச்சரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
புதிய கமரா அமைப்பு சாரதி சோர்வடைவதையும், நித்திரை கொள்வதையும் கண்டறியும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





