இலங்கையில் தேங்காய் விற்பனை செய்வதற்கு அறிமுகமாகும் புதிய நடைமுறை
இலங்கையில் நடமாடும் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது.
நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக கொழும்பு இன்று ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே, கடுவெல மாநகர சபைகளை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்போது, ஒரு தேங்காய், 100 முதல், 120 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலும், கிருலப்பனை பொது சந்தை மற்றும் நிதி அமைச்சின் வளாகத்திற்கு அருகில் நடமாடும் லொறிகள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
(Visited 74 times, 1 visits today)





