இலங்கையில் புதிதாக சாரதி உரிமம் பெற காத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை!
இலங்கையில் சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
சாரதி உரிமம் பெற வருவோருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் நுகேகொடையின் மருத்துவ நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்தே இணைய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)





