இலங்கை

இலங்கையில் இன்று வெளியாகும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை!

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டு புதிய விலை இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு பாவனைக்கான லிட்ரோ சமையல் எரிவாயு, இரண்டாயிம் முதல் மூவாயிரம் ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

குறைக்கப்படும் விலை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாத ஆரம்பத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 5 ஆவது தடவையாக குறைக்கப்பட்டது. இதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3 ஆயிரத்து 186 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 281 ரூபாவாக குறைக்கப்பட்டது. நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் 2021ம் ஆண்டில் 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு சமையல் எரிவாயு, ஆயிரத்து 493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 598 ரூபாவுக்கும், 2.5 கிலோகிராம் நிறையுடைய கொள்கலன் 289 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

எவ்வாறியினும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 5 ஆயிரத்து 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!