தெற்காசிய கிரிக்கெட் வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வர புதிய திட்டம்
2027ஆம் ஆண்டுக்குள், தொழில்முறை கிரிக்கெட்டில் ஈடுபடும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க அவுஸ்திரேலியா தயாராகி வருகிறது.
பல்கலாச்சார சமூகங்களின் பங்கேற்பையும் வருகையையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 2027ம் ஆண்டுக்குள், தெற்காசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, கிரிக்கெட்டுக்காக நாட்டிற்கு வரும் வீரர்களின் எண்ணிக்கையை, 8 சதவீதமாக உயர்த்துவது, அவுஸ்திரேலியாவின் திட்டம் என, கூறப்படுகிறது.
இதன் தற்போதைய மதிப்பு 4.2 சதவீதம்.
இதன்படி ஒவ்வோர் ஆண்டும் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் தெற்காசியப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை 100,000 லிருந்து 200,000 ஆக இரு மடங்காக அதிகரிக்கப்படும்.
அவுஸ்திரேலியாவின் மற்றொரு குறிக்கோள், 2027க்குள் விளையாட பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை 70,000 லிருந்து 100,000 ஆக அதிகரிப்பதாகும்.