வட அமெரிக்கா

கடவுச்சீட்டு தொடர்பில் கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவுறுத்தல்

கனேடிய மக்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க இனி வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்காது என தொடர்புடைய அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இருந்து கனேடிய மக்கள் இணைய மூடாக தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களை பாதுகாப்பான அரசாங்க இணைய பக்கமூடாக தரவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும் குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வண்ணமயமான புதிய பக்கங்கள் உள்ளடக்கிய கனடாவின் கடவுச்சீட்டிற்கான புதிய வடிவமைப்பை வெளியிட்ட அமைச்சர் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்.மேலும், புதிதாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளவர்கள் சேவை கனடாவுடன் பாரம்பரிய விண்ணப்ப செயல்முறையை இன்னும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க இனி தொடர்புடைய அலுவலகங்களில் காத்திருக்கும் நிலை இருக்காது என்றே தெரிவித்துள்ளனர். மாறாக அவர்கள் இனி இணையமூடாக விண்ணப்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்