இலங்கையில் சுற்றுலா பயணிகளை கவர புதிய நடவடிக்கை!
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து பதுளை வரை சுற்றுலா பயணிகளை பார்வையிடும் விசேட பெட்டியுடன் கூடிய புகையிரதமும் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஏப்ரல் 5 ஆம் திகதி, எல்ல, ஒன்பது ஆர்ச் மற்றும் இந்த சுற்றுலாத்தலங்கள் வழியாக இரண்டு புதிய ரயில்கள் இயக்கப்படும்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு ரயில் மற்றும் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் ஒரு ரயில் இயக்கப்படும்.
குறுகிய தூர சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் பெட்டிகளுடன் கூடிய மற்றுமொரு ரயில் எமது நானுஓயிலிருந்து பதுளைக்கு ஆரம்பிக்கப்படும் அல்லது சுற்றுலாப் பயணிகள் குறுகிய தூரம் பயணிக்கும் வகையில் பார்க்கும் பெட்டிகளுடன் கூடிய விசேட சுற்றுலா ரயில் ஆரம்பிக்கப்படும்.