அரசு கொண்டு வர முயற்சிக்கும் புதிய சட்டங்கள்
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், தற்காலத்துக்கு இணக்கமான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மாறும் போது மாறாத நிலையான கொள்கைகளை ஒவ்வொரு துறையிலும் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன் ஒரு கட்டமாக ஐந்தாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கை தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நாட்டில் நிதி ஒழுக்கம் இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முன்வருகின்றன.
எனவே நாட்டில் நிதி ஒழுக்கத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பான குழு உட்பட பல்வேறு குழுக்களை நியமிக்கவும் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கத்தை கையாள்வதற்கான சட்டமூலமும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.