உயர் பாதுகாப்பு வலயமாக மாறும் புதிய களனி பாலம்
புதிய களனி பாலத்தை போதைக்கு அடிமையானவர்களிடமிருந்து காப்பாற்றும் வகையில் உயர் பாதுகாப்பு வலயமாக நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதியில் பொலிஸ், இராணுவ ரோந்து மற்றும் பொலிஸ் சோதனை சாவடியை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையானவர்கள் புதிய களனி பாலத்தின் கீழ் பதுங்கியிருப்பதாகவும், தொடர்ந்து ஆணிகளை அகற்றி வருவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் புதிய களனி பாலம் அபாயகரமாக மாறக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில் தேசிய பாதுகாப்பு துறைகள் சபை கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்க அதிவேக வீதியில் தாமிர கம்பிகள், ஆணிகள் மற்றும் மின்சார கம்பிகளை அறுத்து வரும் இவர்கள் இதுவரை 286 மில்லியன் ரூபா பெறுமதியான செப்பு கம்பிகளை வெட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.