வட அமெரிக்கா

நியூ ஜெர்ஸியில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ பரவல் – நெடுஞ்சாலைகள் மூடல்

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ பரவி வருகின்றது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்து 5,000க்கு மேற்பட்ட மக்கள் வெளியற்றப்பட்டுள்ளன.

மேலும், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அங்கு மாநில அளவிலான அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ 50% கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் தீயை அணைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அதே பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 17 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வனப்பகுதியில் தீயை ஏற்படுத்தியதாக 19 வயதுடைய ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வனப்பகுதியில் பலகைகளை பயன்படுத்தி நெருப்பை மூட்டிவிட்டு அதை முறையாக அணைக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் அதன் காரணமாக இவ்வளவு பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்