இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு

நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்கமாட்டேன், பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திகதி தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிகாந்த் மற்றும் பிரதேச செயலாளர்கள்,உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து தனது அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது மத வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

பதவியினை பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வின்சன்ட் பிரான்சிஸ் மற்றும் மேரிஆன் ஜோசப் ஆகியோருக்கு 02 வது பிள்ளையாக பிறந்த வின்சன்ட் பிரான்சிஸ் ஜஸ்ரினா யுலேக்கா என்பவர் யாழ். திருக்குடும்ப கன்னியர் ஆங்கில பாடசாலையில் ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்று, தனது உயர் கல்வியை சென்னை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து விஞ்ஞானமாணி (தாவரவியல்) பட்டத்தினை 1989 ஆம் ஆண்டு முதற்தரத்திலேயே சித்திபெற்ற ஒரு சிறந்த ஆளுமையுள்ள இலங்கை மாணவியாகத் திகழ்ந்ததுடன், 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு கிழக்கு மாகாண திருகோணமலையில் வசிக்கும் தேசமாண்ய திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டில் இணைந்த வடகிழக்கு மாகாண திருகோணமலை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் பட்டதாரிப் பயிலுனராக இணைக்கப்பட்டார். இவர் 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் முதலாவது நியமனமாக, இணைந்த வடகிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், 2007 ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாண காணி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்), சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் மாகாண ஆணையாளராகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளதுடன், 2013 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு உள்வாங்கப்பட்ட இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்), மாகாண சபைச் செயலாளர், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்ற செயலாளர் பதவிகளிலும் கடமையாற்றி வந்துள்ளார்.

பல்வேறுபட்ட மாகாண திணைக்களங்களின் தலைமைப் பதவிகள் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர் பதவிகளில், பதவி வகித்த காலப்பகுதியில் அத்துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன் அதன் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்து பல்வேறு அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் பாரிய பங்களிப்பைச் செய்தவராவார். அத்துடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான நலன்புரிச் சங்கத்தின் தலைவராகவும் இருந்துவந்துள்ளார்.

32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையேற்று பதவி வகித்து வந்த நிலையில் கடந்த 13.12.2023 திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளதுடன், சமய அனுஸ்டானத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content