இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு புதிய விமானம்

செப்டம்பர் முதலாம் திகதி முதல், சென்னையில் இருந்து  யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது இயக்கப்படும் விமானங்களில் மற்றொரு விமான நிறுவனம் இணைய உள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஒரு விமானம் முதற்கட்டமாக சேவையில் இணையவுள்ளது.

அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும் விமானம் மீண்டும் மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிநிலையத்தை சென்றடையும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமானங்கள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் இயக்கப்படுகின்றன.

மேலும் தற்போது சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் மற்ற விமானங்களுக்கு கூடுதலாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு விமானத்தை அனுப்பியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்தும் இணையம் ஊடாகவும் விமானங்களுக்கான பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!