அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல அறிமுகமாகும் புதிய அம்சம்

யூசர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை வழங்குவதன் பொருட்டு வாட்ஸ்அப் தற்போது சாட் வரலாறுகளை இன்னும் பாதுகாப்பானதாக வைப்பதற்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது.

பிரைவசி பாதுகாப்புகளை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் தற்போது தன்னுடைய யூசர்களுக்கு கான்வர்சேஷன்கள் சம்பந்தப்பட்ட அட்வான்ஸ்ட் செட்டிங்ஸை உருவாக்கி வருகிறது.

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் பிரைவசி சம்பந்தப்பட்ட செட்டிங்கில் கவனம் செலுத்தி வருவதாகவும், அப்ளிகேஷனுக்கு அடுத்து கிடைக்கும் அப்டேட்டில் இந்த அம்சம் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தப் புதிய ஆப்ஷன் மூலமாக இமேஜ்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற மீடியா ஃபைல்கள் பெறுநரின் கேலரியில் ஆட்டோமேட்டிக்காக சேவ் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை நீங்கள் சேர்க்கலாம்.

தற்போதுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடு டிசப்பியரிங் மெசேஜ்களுடன் கூடிய சாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். எனினும், தற்போது வாட்ஸ்அப் இதனை வழக்கமான சாட்டுகளுக்கும் பயன்படும்படி அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாக நாம் பிறருக்கு ஷேர் செய்யும் கன்டென்ட் மீதான முழு கட்டுப்பாட்டையும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.

மீடியா டவுன்லோடுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த அட்வான்ஸ்டான சாட் பிரைவசி அம்சம் மூலமாக மொத்த சாட் வரலாறு எக்ஸ்போர்ட் செய்யப்படுவதையும் இது தடுக்க உதவுகிறது. இந்த ஆப்ஷனை நீங்கள் எனேபிள் செய்துவிட்டால் இந்த செட்டிங்கை ஆக்டிவேட் செய்த யூசர்களின் மெசேஜ்களை உங்களால் எக்ஸ்போர்ட் செய்ய முடியாது. தனிப்பட்ட சாட் பரிமாற்றங்களின்போது பாதுகாப்பை வழங்கவும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் டேட்டாக்கள் ஷேர் செய்யப்படுவதை குறைப்பதற்காகவும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தனித்தனியாகத் தேவைப்பட்டால் மெசேஜ்களை யூசர்கள் ஃபார்வேர்ட் செய்யலாம். ஆனால் முழு சாட் எக்ஸ்போர்ட்டுகளில் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளின் காரணமாக உங்களுடைய பிரைவேட் கான்வர்சேஷன்களைப் பாதுகாப்பாகவும், உங்களுடைய கட்டுப்பாட்டிலும் வைக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் மெட்டா AI-உடன் தொடர்பு கொள்வதிலும் இந்த அம்சம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு யூசர் அட்வான்ஸ்டு சாட் பிரைவசி ஆப்ஷனை விட்டால், இந்த ஆப்ஷனை எனேபிள் செய்த யூசர் மற்றும் கான்வர்சேஷனில் உள்ள பிற நபர்கள் ஆகிய அனைவருமே குறிப்பிட்ட அந்த சாட்டுக்குள் மெட்டா AI உடன் பேசுவதில் இருந்து கட்டுப்படுத்தப்படுவார்கள். இதன் மூலமாக டேட்டா மற்றும் டிஜிட்டல் வாயிலாகத் தொடர்பு கொள்வதில் அதிக கட்டுப்பாட்டை யூசர்களுக்கு வாட்ஸ்அப் வழங்குகிறது.

இந்த அம்சம் தற்போது மேம்பாட்டு நிலையில் உள்ளது. இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் இது குறித்த சில கூடுதல் பயன்களை கூடிய விரைவில் வாட்ஸ்அப் வெளியிடலாம். இது வெளியானவுடன் இந்த அம்சத்தைப் பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்களுடைய சாய்ஸ். ஒவ்வொருவரின் விருப்பங்களின் அடிப்படையில், இந்த மேம்படுத்தப்பட்ட பிரைவசி பாதுகாப்பு ஆப்ஷனை ஒருவர் உபயோகிக்கலாம்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்