WhatsApp அறிமுகம் செய்யும் புதிய வசதி

ஆண்ட்ராய்டு யூசர்களை குறி வைத்து வாட்ஸ்அப் தற்போது எக்கச்சக்கமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த அம்சங்கள் போன் கால்கள் பேசும் பொழுது யூசர்களுக்கு கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், மீடியாக்களை ஷேர் செய்யும் பொழுது பிரைவசியை அதிகப்படுத்தவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
WABetaInfo -ன்படி, இந்த புதிய கருவிகள் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பின் 2.25.10.16 பீட்டா வெர்ஷனில் தற்போது அறிமுகமாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிலான யூசர்கள் இதனை தற்போது சோதித்து வருகின்றனர்.
அப்படி சோதனையில் இருக்கும் அம்சங்களில் ஒன்று இன்கமிங் வாய்ஸ் கால்களுக்கு மைக்ரோஃபோன் ஆப்ஷனை மியூட் செய்வது. இந்த அம்சம் நோட்டிஃபிகேஷன் பேனலில் கிடைக்கிறது.
இதன் மூலமாக யூசர்கள் மைக்ரோஃபோனை மியூட் செய்தவாறு போன் காலை பேசலாம். இதற்கான எதார்த்தமான பயன்பாடு என்பது மாறுபட்டாலும், அதிக இரைச்சல் நிறைந்த சூழல்கள் அல்லது தாம் எதுவும் பேசாமல் எதிரே போனில் பேசுபவர் என்ன சொல்கிறார் என்பதை மட்டும் கேட்க நினைப்பவர்களுக்கு இந்த அம்சம் நிச்சயமாக உதவியாக இருக்கும்.
இரண்டாவது அப்டேட் வீடியோ கால்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலமாக யூசர்கள் வீடியோ காலுக்கு பதில் அளிக்கும் முன்பு கேமராவை டிசேபிள் செய்வதற்கான ஆப்ஷனை பெறுகிறார்கள்.
வீடியோ கால் பேசுவதற்கு கேமராவை ஆன் செய்வதற்கு முன்பு ஒரு சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அல்லது வீடியோவில் தங்களை காட்ட வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும். மேலும் இது தெரியாத நபர்களில் இருந்து வீடியோ கால் பெறும் பொழுது பிரைவசியை அதிகரிக்கிறது.
அது மட்டும் அல்லாமல், வீடியோ கால்களை இன்னும் சுவாரசியமானதாக மாற்றுவதற்கு எமோஜி ரியாக்ஷன்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலமாக வீடியோ காலில் ஈடுபட்டிருப்பவர்கள் எமோஜிகள் மூலமாக தாங்கள் நினைப்பதை உடனுக்குடனாக ரியாக்ட் செய்யலாம். இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் தற்போது பீட்டா சோதனை செய்பவர்களுக்கு பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது. வரக்கூடிய வாரங்களில் அனைவரும் பயன்படுத்த இந்த அம்சங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் கால் தொடர்பான அப்டேட்டுகளில் புதிய பிரைவசி அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்காக வாட்ஸ்அப் வேலை செய்து வருகிறது. வழக்கமாக வாட்ஸ்அப்பில் நீங்கள் பெறும் எந்த ஒரு போட்டோ அல்லது வீடியோ ஆட்டோமேட்டிக்காக பெறுநரின் போன் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். இது யூசர்களிடையே பிரைவசி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
இதனால் மீடியாக்கள் ஆட்டோ சேவ் செய்யப்படுவதை தடுப்பதற்கு வாட்ஸ்அப் ஒரு அம்சத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலமாக பெறுநரின் சாதனத்தில் மீடியாக்கள் சேமிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை அனுப்புனர் முடிவு செய்யலாம். இது ஒரு டாகுள் ஆப்ஷனாக கிடைக்கும். இந்த அம்சம் கிட்டத்தட்ட டிசப்பியரிங் மெசேஜஸ் அம்சத்தை போன்றது. அடிக்கடி சென்சிடிவ் அல்லது பர்சனல் கன்டென்ட்களை அனுப்புபவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இதன் மூலமாக டேட்டாக்கள் தவறாக பயன்படுத்தப்படுதல், தவறுதலாக மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்தல் அல்லது பாதுகாப்பற்ற சாதனங்களில் மீடியாக்கள் சேமிக்கப்படுதல் போன்றவற்றை குறைக்க உதவும்.
வழக்கம் போல, இந்த மாற்றங்கள் முதலில் பீட்டாவிற்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது. ஒரு சில வாரங்களில் அனைத்து ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் இவை பயன்படுத்த கிடைக்கலாம்.