இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்
இலங்கை அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவேத் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலேயே இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதாவது வரும் டி20 உலகக்கோப்பை தொடர் வரை மட்டுமே இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவேத் 1992-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
பயிற்சியாளர் பதவியை பொறுத்த வரை 2009-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார்.
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இயக்குனராகவும் உள்ளார்.