செய்தி விளையாட்டு

பெங்களூருவில் 1,650 கோடி செலவில் கட்டப்படும் புதிய கிரிக்கெட் மைதானம்

IPL கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் ஆனதால், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4ந்தேதி வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு திரண்டனர்.

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்துடன் சம்பவம் நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க சின்னசாமி மைதானம் நகரின் மையப்பகுதியில் அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல் – மந்திரி சித்தராமையா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானத்தை கட்ட கர்நாடக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களுரூவின் 2வது கிரிக்கெட் மைதானம் பொம்மசந்திராவில் அமைக்கப்படவுள்ளது.

சூர்யா சிட்டியில் 1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி