விட்டிலிகோ நோயை குணப்படுத்த புதிய க்ரீம் அறிமுகம்!
விட்டிலிகோ நோயை குணப்படுத்த முதல் முறையாக க்ரீம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை Ruxolitinib (Opzelura என விற்கப்படுகிறது) என்ற க்ரீமை அங்கீகரித்துள்ளது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (National Institute for Health and Care Excellence) விட்டிலிகோவின் தாக்கம் உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த க்ரீமை பரிந்துரைக்கிறது.
குறிப்பாக பிற மேற்பூச்சு சிகிச்சைகள் தோல்வியடைந்தால் இந்த க்ரீம் பரிந்துரைக்கப்படுகிறது.
விட்டிலிகோ என்பது ஒரு நாள்பட்ட தோல் நிலை, இதில் நோயெதிர்ப்பு அமைப்பு நிறமி உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி, வெள்ளைத் திட்டுகளை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் நிலைமை பிரித்தானியாவில் 100 பேரில் ஒருவரை பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Ruxolitinib நோயெதிர்ப்பு மண்டலத்தின் தாக்குதலை அமைதிப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.
தோல் செல்கள் சரிசெய்யப்பட்டு அவற்றின் இயற்கையான நிறத்தை மீண்டும் பெற அனுமதிப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிற மருந்துகளை விட 04 மடங்கு அதிகமாக பயனுள்ளதாக இருப்பதாகவும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




