ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய புதிய குழு நியமனம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி குறித்து விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.