செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஷாஹீன் அப்ரிடி டி20, ஒருநாள் பாகிஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.ஷான் மசூத் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் , டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இதனால் பாபர் அசாம் கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து மீண்டும் டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் விலகினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருடன் ஆரம்பமாக உள்ளது.

(Visited 31 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி