ஐரோப்பா

புதிய Brexit கடவுச்சீட்டு விதி; இறுதி நேரத்தில் திருப்பி அனுப்பப்படும் பிரித்தானிய பயணிகள்

புதிய Brexit கடவுச்சிட்டு விதி காரணமாக இந்த ஆண்டு சுமார் 100,000 பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுமுறை செல்வதை தவிர்க்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரித்தானிய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் 32 மில்லியன் கடவுச்சிட்டுகள் தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியர்கள் வழக்கமாக பயணப்படும் ஐரோப்பிய நாடுகளான Iceland, Norway, Lichtenstein மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் முன்னர் தங்கள் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ichef.bbci.co.uk/news/976/cpsprodpb/F75B/productio...

நீங்கள் நாடு திரும்பும் நாளில் இருந்து 3 மாதங்கள் வரையில் உங்கள் கடவுச்சீட்டு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் கடவுச்சீட்டானது செப்டம்பர் 2018க்கு முன்னர் விநியோகிக்கப்பட்டிருந்தால், அது 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் செல்லுபடியாகும்.இந்த 10 ஆண்டுகள் விதியானது, கண்டிப்பாக ஐரோப்பாவை விரும்பும் பிரித்தானிய பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யும் முன்னர் உங்கள் கடடுச்சீட்டுகளை ஒருமுறை பரிசோதித்து உறுதி செய்யுங்கள் என்றே பெரும்பாலானோர் அறிவுறுத்துகின்றனர்.மேலும், இதுபோன்ற சிக்கலால் நாலும் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பெரியவர்களுக்கு 88.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது. ஆனால் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால் 57.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!