இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நியமனம்

குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக பி. எம். டி.நிலுஷா பாலசூரியவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் இல்லுக்பிட்டிய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு அமைச்சரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பாலசூரிய, தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றுகின்றார்.
(Visited 30 times, 1 visits today)