வெள்ளை மாளிகையில் இருந்து கத்தாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த மன்னிப்பு கோரிய நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கூட்டு தொலைபேசி அழைப்பு மூலம், கத்தார் தலைவருக்கு தோஹாவில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் கத்தார் இறையாண்மையை மீறியதற்காக நெதன்யாகு வருத்தம் தெரிவித்ததாகவும் எதிர்காலத்தில் இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதலை மீண்டும் நடத்தாது என்பதை உறுதிப்படுத்தியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 9ம் திகதி அமெரிக்க ஆதரவுடன் நடந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து கீழ்நிலை ஹமாஸ் உறுப்பினர்களும் ஒரு கட்டார் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டனர். ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்கள் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினர்.
போர் நிறுத்த முயற்சிகளில் முக்கிய மத்தியஸ்தராகவும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய தளமான அல் உதெய்டை நடத்தும் இடமாகவும் இருக்கும் கத்தார் மீதான இஸ்ரேலிய முதல் தாக்குதல் இதுவாகும்.





