வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாறு படைத்த நேபாளம்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் சார்ஜாவில் இன்று ஆரம்பமானது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் பவுடல் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், நவின் பிடாய்சி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
(Visited 4 times, 1 visits today)