ஈரான் மற்றும் சவுதி அரேபிய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் இடையில் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (11.10) தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் அவர் உயிருடன் இருந்தாலும் இறந்தவர் தான் என விவரித்துள்ளார்.
அல்-அக்ஸா தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் உத்தியோகபூர்வ போர் நிலை அறிவிக்கப்பட்டதுடன் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)