இறுதி சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
அவர் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார்.
இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.





