அரசியல் இலங்கை செய்தி

நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

நௌபர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாவார் என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்றது.

இதன்போது  அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது தொடர்பில் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டார்.

மேற்படி கைது நடவடிக்கையானது நாட்டு மக்களை திசை திருப்பும் செயல் எனவும் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடக்கும் காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், சனல் 4 ஊடகம் கூறும் விடயங்களை நம்ப முடியாது எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!