நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே தரையில் விழுந்த நேட்டோ விமானம்!
துருக்கிக்கு (Turkey) சொந்தமான நேட்டோ இராணுவ விமானம் ஒன்று இன்று ஜோர்ஜியா (Georgia) மற்றும் அஜர்பைஜான் (Azerbaijan) எல்லையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 விமானம் துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையில் விழும் காட்சிகள் சமூக ஊடக தளங்களில் வெளியாகியுள்ளன.
விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன் விபத்துக்கான சரியான காரணமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தடயவியலாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)




