சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை குறித்து நாசா வெளியிட்ட அறிக்கை
விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸின்உடல் நிலை பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் நலமாக இருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.
ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.
இதனால், இருவரும் 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக விண்வெளி மையத்தில் இருக்கும் அவரின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைத் தளங்களில் தகவல் பரவியது.
ஆனால், இதனை மறுத்து நாசா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், “ஐஎஸ்எஸ்ஸில் உள்ள அனைத்து நாசா விண்வெளி வீரர்களும் வழக்கமான மருத்துவ மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களால் கண்காணிக்கப்படுகிறார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.