‘முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: மோடி மீது குற்றச்சாட்டு
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் . நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களை “ஊடுருவல்காரர்கள்” என்று அழைத்த பிறகு வெறுப்பூட்டும் பேச்சைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார் –
“ காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது” என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டபப்ட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் திரு. நரேந்திர மோடி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.