இலங்கை மக்களுக்கு நாமல் வழங்கிய வாக்குறுதி
இலங்கையில் வரம்பற்ற வரிச்சுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் மீண்டும் நாட்டில் அமுல்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் தனது கட்சி உறுப்பினர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று பிற்பகல் கெக்கிராவ பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
நாமல் ராஜபக்ஷவிற்கு கெக்கிராவ பிரதேசத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது.
இதேவேளை, மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் பத்தினி தேவஸ்தானத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.





