இந்தியா செய்தி

நாகாலாந்து ஆளுநர் லா.கணேசன் 80வது வயதில் காலமானார்

நாகாலாந்து ஆளுநர் லா.கணேசன் சென்னையில் 80வது வயதில் காலமானார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த இவர், தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

பாஜக மாநில தலைவராகவும் இவர் இருந்துள்ளார். இதன்பின்னர் 2021ல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக லா.கணேசன் பதவி வகித்து வந்தார்.

சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி