அறிந்திருக்க வேண்டியவை

நிலவின் தென்பகுதியில் மறைந்திருக்கும் மர்மம் – உறுதி செய்த ரோவர்

நிலவின் தென் பகுதியில் தரை இறங்கி தன்னுடைய ஆய்வு பணியை மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பணியின் மூலம் ஆக்ஸிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆற்றல்கள் நிலவின் நிலப்பரப்பில் புதைந்திருப்பதை கண்டறிந்து இருக்கிறது.

சந்திராயன் 3ல் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை முதல் தனது பணிகளை தொடங்கி இருக்கிறது.

பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம், இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. மேலும் சல்பர், இரும்பு, குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை உள்ளதும் உறுதி செய்யப்படுகிறது.

ரோவரில் உள்ள லேசன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் மூலம் ரோவர் நிலவின் தென் துருவங்களில் உள்ள கனிமங்களையும், வடிவங்களையும் கொண்டு ஆய்வு செய்து அவற்றை கண்டறிந்து உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் நிலவினுடைய நிலத்தன்மை, உட்பரப்பு குறித்து தீரமான ஆய்வை நடத்த வழி ஏற்பட்டு இருக்கிறது. மேலும் நிலவை குறித்த ஆராய்ச்சியில் இது மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நிலவை ஆய்வு செய்ய வேண்டும் என்பது இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுடைய கனவு திட்டமாக இருந்து கொண்டிருக்கக் கூடிய வேளையில், நிலவை ஆய்வு செய்யும் நான்காவது நாடு என்ற பெருமையை பெற்று உள்ளது. இந்தியா தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சந்திராயன் 4 திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்ட ஆலோசனைப் பணிகளில் தற்போது இறங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாது உலக நாடுகள் நிலவை ஆய்வு செய்வதற்கு ஒதுக்கிய நிதியை விட இந்தியா குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கி நிலவு குறித்த ஆராய்ச்சியில் தன்னுடைய வெற்றியை நிலை நிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் தங்களுடைய திறமையை உலகறிய செய்திருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.