டிரம்பின் உடல்நிலை தொடர்பில் தொடரும் மர்மம் – மீண்டும் கைகளில் ஏற்பட்டுள்ள காயங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கைகளில் மீண்டும் காயம் தென்பட்டுள்ளதனை தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்த ஊகங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
சமீபத்தில் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்குடன் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, டிரம்பின் வலது கையில் குறிப்பிடத்தக்க காயம் தென்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையும், அவரது கை கனம் கூடிய ஒப்பனையால் மூடப்பட்டிருந்தது. இது கைகுலுக்கலால் ஏற்பட்ட சிராய்ப்பாக இருக்கலாம். டிரம்பின் உடல்நிலை குறித்து விரிவாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், தெரிவித்தார்.
டிரம்பின் மருத்துவர் பார்பபெல்லா, இது ஆஸ்பிரின் பயன்பாடு காரணமாக ஏற்படும் சாதாரண எரிச்சல் என்றும் கூறினார்.
மேலும், முன்னாள் வெள்ளை மாளிகை மருத்துவரும் தற்போது காங்கிரஸ்காரருமான ரோனி ஜாக்சன், டிரம்ப் “இந்த நாடு பார்த்த மிக ஆரோக்கியமான ஜனாதிபதி” என உறுதியளித்தார்.
இருப்பினும், டிரம்பின் கைகளில் அடிக்கடி தோன்றும் காயங்கள், வீக்கம் மற்றும் ஒப்பனை மறைப்புகள் குறித்து மக்கள் கவலைப்பட்டு வருகின்றனர். வெள்ளை மாளிகை, அண்மையில் டிரம்பிற்கு “நாள்பட்ட நரம்புப் பற்றாக்குறை” இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.