இலங்கை

மட்டக்களப்பு- கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரையெதுங்கிய மர்ம பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது.

அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.இந்நிலையில் அப்பொருள் இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கரை ஒதுங்கியுள்ள பொருள் இப்பொருள் தொடர்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில P.ஆ.வு. எனவும் பின்பக்கம் (P) என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!