சுவீடன் தலைநருக்கு அருகில் பறந்து சென்ற மர்ம ட்ரோன் – கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு!
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு (Stockholm) வெளியே உள்ள ஒரு லிடிங்கோ தீவில் (Lidingö island ) மர்ம ட்ரோன் ஒன்று பறந்து சென்று குப்பைகளை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய வர்த்தகக் குழுவின் வில்லாவின் மீது குறித்த ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றாலும், ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் நாசவேலை மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கொட்டப்பட்ட குப்பைகளை புலனாய்வாளர்கள் சேகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)




