தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த மியான்மர் ராணுவம்

கடந்த வாரத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக மியான்மர் இராணுவம் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ஆளும் இராணுவ ஆட்சிக்குழுவின் மாநில நிர்வாக கவுன்சில் ஒரு அறிக்கையில், இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 22 வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், இராணுவத்துடன் சண்டையிடும் கிளர்ச்சிக் குழுக்கள் நிவாரண முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தன.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு குறைந்தது 2,886 பேர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் காணவில்லை.
(Visited 3 times, 1 visits today)