டெக்சாஸ் எல்லைக்கு விரைந்த மஸ்க் : புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்!
உலகின் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க் நேற்றைய (28.09) தினம் டெக்சாஸ் எல்லைக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு விஜயம் செய்த அவர், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளைச் சந்தித்து நிலைமையைப் பற்றி கேட்டறிந்துக்கொண்டார்.
சமீப நாட்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் சரக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வடக்கு மெக்சிகோவிற்குச் சென்று, பின்னர் அமெரிக்க எல்லையைத் தாண்டி டெக்சாஸ், அரிசோனா மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர்.
அத்துடன் சமீபகாலமாக, இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் புலம் பெயர்வோர் குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
குறிப்பாக சான் டியாகோ, கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் எல்லை நகரங்களான எல் பாசோ மற்றும் ஈகிள் பாஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் புகலிடக்கோரிக்கையின் மந்த நிலையை பின்பற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே மஸ்கின் விஜயம் அமைந்துள்ளது.